×

விலக்கு தேவை; நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் தமிழக அரசு வலியுறுத்தல்.!!!

சென்னை: நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் நடத்த கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, நீட் தேர்வால் மருத்து கனவு பறிபோனதால் மாணவி அனிதா முதல்முறையாக தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் நீர் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இருப்பினும், நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றுதான் வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம்  தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.நீட் தேர்வை ஏற்க முடியாது, நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை. நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். தமிழ்நாட்டில் ஏற்கனவே அமல்படுத்தி வரும் இடஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான 2021ம் ஆண்டு நீட் தேர்வு, ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post விலக்கு தேவை; நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் தமிழக அரசு வலியுறுத்தல்.!!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Union Health Minister ,Harsh Vardhan ,Chennai ,Tamil ,Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்